ஓய்வூதியத் திட்டங்கள்

Nellai Pasanga 😍

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

ஓய்வூதியத் திட்டங்கள்

ஓய்வூதியத் திட்டங்கள்:
·  மத்திய/மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் VAOவின் பங்கு குறிப்பிடத்தக்கது.
·  சமூக நலத்துறையின் கீழ் இயக்கி வரும் முதியோர் ஓய்வூதியத் திட்டங்களை வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.
1)
முதியோர் ஓய்வூதியத் திட்டம்
2)
ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம்
3)
ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம்
4)
ஆதரவற்ற வேளாண்மைத் தொழிலாளர்கள் ஓய்வூதியத் திட்டம்
5)
கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம் 
1. முதியோர் உதவித் திட்டம் (சாதாரணம்)
·  இந்தத் திட்டம் அரசு ஆணை எண் 73, நிதித்(ஓய்வூதியம்) துறை, நாள் 22-1-1962-இன் படி வழங்கப்பட்டு வருகிறது.
·  65 வயது நிறைவு பெற்றவர், வருமானம் ஏதுமில்லை. சொத்து மதிப்பு ரூ.5000-க்கு, மிகாமல் இருக்க வேண்டும்.
·  பிச்சைக்காரராக இருக்கக் கூடாது.
·  வயது வந்த மகன் இருக்கக் கூடாது.
·  சுயமாக வேலை செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலாதவர்களாக இருத்தல் வேண்டும்.
·  மைய அரசின் நிதி: 75 ரூபாயும் மாநில அரசின் நிதி: 125 ரூபாயும் சேர்த்து ரூ. 200 வழங்கப்பட்டது.
·  தற்போது ரூ. 400லிருந்து ரூ. 1000 வரை வழங்கப்படுகிறது. 
2. முதியோர் உதவித் திட்டம் (குருடர், பக்கவாதம், கை, கால் இழந்தவர்)
·  வயது வரம்பு – 60 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். வருமானம் – ஏதும் இல்லை. சொத்து மதிப்பு ரூ.1000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
·  பிச்சைக்காரராக இருத்தல் கூடாது.
·  வயது வந்த மகன் இருக்கக் கூடாது.
·  சுயவேலை செய்ய இயலாதவராய் இருத்தல் வேண்டும்.
·  மத்திய அரசின் நிதி ஏதும் இல்லை. முழுவதும் மாநில அரசே வழங்குகிறது(ரூ.200). தற்போது ரூ. 400-லிருந்து ரூ. 1000 வரை வழங்கப்படுகிறது. 



3. உடல் ஊனமுற்றோர் உதவித் திட்டம்:
·  அரசு ஆணை (பல்வகை) எண் 1402 நிதித்துறை நாள் 6-11-1974-இன் படி வழங்கப்பட்டு வருகிறது.
·  வயது வரம்பு – 45 வயது நிறைவு. வருமானம் ஏதும் இல்லை.
·  சொத்து மதிப்பு ரூ.1000-ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
·  பிச்சைக்காரராக இருத்தல் கூடாது.
·  வயது வந்த மகன் இருக்கக் கூடாது.
·  சுயமாய் வேலை செய்து பொருள் ஈட்டும் தன்மையற்றவராய் இருக்க வேண்டும்.
·  மத்திய அரசு நிதி வழங்கவில்லை. மாநில அரசு ரூ.400 வழங்குகிறது.
·  தற்போது ரூ.400-லிருந்து ரூ.1000-வரை உயர்ந்துள்ளது. 
4. விதவை ஓய்வூதியத் திட்டம்:
·  அரசு ஆணை (பல்வகை) எண் 507 நிதித்துறை, நாள் 27-5-1975 – இன்படி வழங்கப்பட்டு வருகிறது.
·  வயது வரம்பு இல்லை. சொத்தின் மதிப்பு ரூ.1000/-க்குள் இருக்க வேண்டும்.
·  பிச்சைக்காரராக இருத்தல் கூடாது.
·  வயது வந்த மகன் இருந்தாலும் வருமானம் ஏதும் இல்லாதிருக்க வேண்டும்.
·  மறுமணம் செய்திருத்தல் கூடாது.
·  மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு ஏதும் இல்லை. மாநில அரசு ரூ.400 வழங்குகிறது. தற்போது ரூ.400-லிருந்து ரூ.1000-வரை உயர்ந்துள்ளது. 
5. ஆதரவற்ற வேளாண்மைத் தொழிலாளர் ஓய்வுதியத் திட்டம்
·  அரசாணை பல்வகை எண் 1465. சமூக நலத்துறை நாள் 3-05-1984-இன்படி வழங்கப்பட்டு வருகிறது.
·  வயது வரம்பு 30. வருமானம் ஏதுமில்லை.
·  பிச்சைக்காரராக இருத்தல் கூடாது.
·  மறுமணம் செய்திருக்கக் கூடாது.
·  5-ஆண்டுகளுக்கு மேல் கணவனை பிரிந்திருத்தல் வேண்டும்.
·  உரிமையியல் நீதிமன்றத்தின் மூலமாக விவாகரத்துப் பெற்றிருக்க வேண்டும்.
·  வருமானம் ஏதுமின்றி வயது வந்த மகன்கள் இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கலாம்.
·  மைய அரசு நிதி வழங்குவதில்லை. மாநில அரசு ரூ.400 வழங்குகிறது. தற்போது ரூ.400-லிருந்து ரூ.1000-வரை உயர்ந்துள்ளது. 
இலவச வேட்டி/சேலை வழங்குதல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அரசு வழங்கும் பிற உதவிகள்
·  பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது ஆண்களுக்கு வேட்டியும், பெண்களுக்குச் சேலையும் வழங்கப்பட வேண்டும் என்று அரசாணை எண் 995, நிதித்துறை, நாள் 18.07.1979, 459 மற்றும் சமூக நல மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 15-10-1991-இன் படி வழங்கப்படுகிறது. 
2. முதியோர் ஓய்வூதியத் தொகை பெறும் பயனாளிகளுக்கு இலவச சத்துணவு மற்றும் இலவச அரிசி வழங்குதல் :
·  அரசு ஆணை எண்.771, சமூக நலத்துறை, நாள் 6-10-1980-இன் படி முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு 1-11-1990 முதல், வாரத்திற்கு தலா ஒரு கிலோ இலவச அரிசி வழங்க உத்தரவிடப்பட்டது.
·  அரசாணை எண் 394, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 5-01-1991-இன் படி முதியோர் ஓய்வூதியம் பெறும் அனைத்து பயனாளிகளுக்கும் 15-9-1991 முதல் கீழே கண்ட அளவுகளின்படி இலவச அரிசி பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
·  சத்துணவுக்கூடங்களில் உணவு உட்கொள்ளாதவர்களுக்கு வாரம் ஒருமுறை தலா 1-கிலோ இலவச அரிசி வழங்கப்படும்.
·  சத்துணவுக்கூடங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு வாரம் ஒரு முறை தலா ½ கிலோ இலவச அரிசி வழங்கப்படும். 
தற்போது
·  அரசாணை எண் 288 சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை, நாள் 29-6-1997-இன் படி வாரம் ஒரு முறை அரிசி வழங்கும் முறை திருத்தப்பட்டு மாதம் ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது.
·  அதன்படி சத்துணவுக் கூடங்களில் உணவு உட்கொள்பவர்களுக்கு மாதம் 2 கிலோ இலவச அரிசியும் சத்துணவுக் கூடங்களில் உணவு உட்கொள்ளாதவர்களுக்கு மாதம் 4 கிலோ-இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. 
அன்னபூர்ணா திட்டம்
·  அரசானை எண் 31, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம், நாள் 04-03-2002-இன்படி அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் ஆதரவற்ற முதியோர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளில் மிகவும் வயது முதிர்ந்த நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 10 கிலோ உணவு தானியம் மைய அரசு மானியத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.
·  அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மேலே குறிப்பிட்ட 2 (அ) 4 கிலோ அரிசி மற்றும் இலவச மதிய உணவு கிடையாது. 
VAO-வின் கடமைகளும் பொறுப்புகளும்
·  ஓய்வுதியம் வேண்டி மனுக்கள் அனுப்பப்படும் போது, அம்மனுக்கள் மீது VAO தீர விசாரணை மேற்கொள்ள வேண்டும். 
விசாரணையின் போது கவனிக்கப்பட வேண்டியவைகள்
·  மனுதாரர் குறிப்பிட்ட கிராமத்தைச் சார்ந்தவர்தானா?
·  மனுதாரர் ஓய்வூதியம் பெறுவதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் (வயது வரம்பு, சொத்து மதிப்பு மற்றும் பிற நிபந்தனைகள்) பெற்றுள்ளாரா?
·  மனுதாரர் உண்மையிலேயே ஆதரவற்றவரா?
·  எப்படி அவர் அன்றாட வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார்?
·  வழங்கப்படும் ஓய்வூதியம்தான் அவருடைய வாழ்வாதாரமாக இருக்குமா?
·  மனுதாரரரிடம் நேரடி விசாரணை வாக்குமூலம் மற்றும் இரு சாட்சிகளில் கையொப்பம் ஆகியவற்றைப் பெற வேண்டும். 
தமிழ்நாடு துயர் துடைப்புத் திட்டம்
·  அரசாணை(நிலை) எண் 479 நிதித்துறை, நாள் 23-05-1989-இன் படி இத்திட்டம் தொடங்கப்பட்டது.
·  இத்திட்டத்தின்படி ஆண்டு வருமானம் ரூ.5000-க்குட்பட்டு பொருளீட்டும் குடும்பத் தலைவரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ. 2000 வழங்கப்பட்டு வந்தது.
·  அரசாணை (நிலை) எண் 726, வருவாய்த் துறை, நாள் 05-08-1986-இல் ஆண்டு வருமானம் ரூ. 7200 வரையுள்ள குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என ஆணையிட்டது.
·  தற்போது அரசாணை (நிலை) எண். 11, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் : 22-01-1999-இன்படி ரூ. 10,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது. 
VAO-வின் கடமைகள்
·  மனுதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறுவதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் பெற்றுள்ளனரா என VAO விசாரித்து தங்கள் வாக்குமூலத்தை அறிக்கையாக தர வேண்டும்.
·  குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.7,200-க்கு மிகாமல் உள்ளதா?
·  குடும்பத் தலைவரின் இறப்புப் பதிவேட்டில் இறப்பு பதியப்பட்டுள்ளதா? இறப்பிற்குரிய சான்றாவணம் உள்ளதா?
·  கிராமத்திலுள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலம் பெற வேண்டும்.
·  மனுதாரரிடம் நேரடு விசாரணை வாக்குமூலம் மற்றும் இரு சாட்சிகளிடம் கையொப்பம் பெற வேண்டும்.
·  மனு, குடும்பத்தலைவர் இறந்த 6 மாதங்களுக்குள் பெறப்பட்டுள்ளதா? (அ) 1 வருடத்திற்குள் பெறப்பட்டுள்ளதா? 6 மாதங்களுக்கு மேல் இருப்பின், தாமதத்திற்கான காரணத்தை மனுதாரரிடம் விசாரித்து அறிந்து, பின்னர் மாவட்ட ஆட்சியரின் தாமத பொறுத்தல் ஆணை பெறப்பட வேண்டும்.
·  துயர்துடைப்பு நிவாரணம் வழங்கப்படும் போது வட்டாட்சியருடன் இருந்து பயனாளியை அடையாளம் காட்டி ’என்னால்அடையாளம் காண்பிக்கப்பட்டது’ என்று சான்றளிக்க வேண்டும்.