இருப்புப் பாதைகள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தல்:

Nellai Pasanga 😍

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

இருப்புப் பாதைகள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தல்:

இருப்புப் பாதைகள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தல்:

·  இருப்புப் பாதைகள் அமைந்திருக்கும் கிராமங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள் கீழ்க்கண்ட பணிகளைச் செய்ய கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.
·  இருப்புப் பாதைகளுக்குச் சேதம் விளைவிக்கவோ, தண்டவாளங்களில் அதற்கு அடியிலுள்ள அடிக்கட்டைகளில் இருக்கும் இணைப்புக் கருவிகளை அப்புறப்படுத்தக் கூடாது என்றும்,
·  தண்டவாளத்தின் மீது கற்களையோ இதரத் தடைகளையோ வைக்கக் கூடாது என்றும்,
·  போக்குவரத்துக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இருப்புப் பாதை வாயில்களில்(Railway Gates) குறுக்கிடக் கூடாது என்றும் கிராம மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.
·  இருப்புப் பாதையில் அமைந்திருக்கும் பாலங்களை பொது வழியாக உபயோகிப்பதால் ஏற்படக் கூடிய அபாயங்களையும், அது சட்ட விரோதமான செயல் என்பதையும் கிராம மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
·  இருப்புப் பாதை வேலிகளுக்குள்ளாக நடக்கும் குற்றங்கள் குறித்து இரயில்வே அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துவதுடன் அவர்களுக்கு புலனாய்வில் உதவி செய்ய வேண்டும்.
·  பெருமழை பெய்யும் நேரங்களில் தண்டவாளங்களைப் பாதிக்கும் அளவுக்கு அருகாமையிலுள்ள ஏரிகள், கால்வாய்கள், பாலங்கள் வழியாக தண்ணீர் வருமேயானால் அதற்குண்டான தடுப்பு நடவடிக்கை எடுக்கவும், உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கையாக இரயில்வெ அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
·  எதிர்பாராத விபத்துள் நேரிட்டால் உடனடித் தகவல்களை உரியவர்களுக்க்கு அனுப்புவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் வேண்டும்.
·  சட்டம் ஒழுங்கு கெடும் நேரங்களில் இருப்புப் பாதைகளைக் காவல் காக்க கிராம உதவியாளர்களை அனுப்பி வைக்க வேண்டும். 
கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள்
·  கிராமத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் கிராம நிர்வாக அலுவலர் கடமைப்பட்டுள்ளார்.
·  சட்டம் ஒழுங்கு சீர்குலையும் போது காவல் துறையினருக்குக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் உதவி செய்ய சட்டப்படி கடமைப்பட்டவர் கிராம நிர்வாக அலுவலரே ஆவார்.
·  காவல்துறை கிராமத்தில் யாதொரு குற்றமும் நடவாதபடி தடுக்கும் போதும்
·  குற்றங்களைக் கண்டுபிடிக்கும் போதும்
·  மறியல், ஊர்வலங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சமூகக் கலவரங்கள், சாதிச்சண்டைகள் இவைகளின் போதும்
·  வாரண்டுகளையும் மற்றும் சோதனை வாரண்டுகளையும் நிறைவேற்றும் போதும்
·  ஆக்கிரமிப்புச் சொத்தை ஜப்தி செய்து ஏலம் போடுவதற்கான வாரண்டுகளை நிறைவேற்றும் போதும்
·  பொது அமைதிக்கு எதிராக எழும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளின் போதும் கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையினருடன் இணைந்து உதவி செய்தல் வேண்டும்.
·  மனித உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து உண்டாக்கும் சந்தேகத்திற்குரிய பொருள்கள் (நாட்டு வெடிகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள்) பொது இடங்களில் காணப்பட்டால் உடனே காவல்துறைக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
·  பண்டிகைக்கால விழாக்கள் அல்லது வேறு நிகழ்ச்சிகளில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என் தெரிய வந்தால் உடன் காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும்.
·  சட்டம் – ஒழுங்குப் பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தவும் சமரசத் தீர்வு காணவும், அமைதிக்குழு கூட்டம் நடத்திரவும் அதற்கான ஏற்பாடுகளுக்கு காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.