ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்

Nellai Pasanga 😍

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்

·  மாவட்டம் தோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஆகிய பணியிடங்களும் அவர்களுக்கு உதவி புரியக் கோட்ட அளவில் தனி வட்டாட்சியர் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
·  ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் வீட்டுமனை ஒப்படை, நில ஒப்படை, வீட்டுமனை மற்றும் சுடுகாடு மற்றும் இடுகாடு பாதைக்காக நிலமெடுப்பு ஆகிய இனங்களில் அனைத்து கிராமக் கணக்குகளின் நகல்களையும் தேவைப்படும் பொழுது தனி வட்டாட்சியருக்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்க வேண்டும்.
·  ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவிகள், கல்வி உதவித் தொகை, இலவசப் புத்தகங்கள், தங்குமிட வசதி ஆகியவற்றிற்குத் தேவையான சான்றுகளையும், கலப்பு திருமண உதவிகள், வேலை வாய்ப்பு உதவிகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், கறவை மாடுகள் வாங்குதல் ஆகியவற்றிற்குத் தேவையான உதவிகளை செய்வதுடன், இத்திட்டங்கள் வெற்றிகரமாக நடந்திடவும் சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கிராம நிர்வாக அலுவலர் வழங்க வேண்டும்.
·  இது போலவே பிற்பட்ட வகுப்பு சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்குக் கல்வி உதவிகள் தொழிற்கூடங்கள் அமைத்தல், தொழில் கருவிகள் வழங்குதல், கள்ளர் சீரமைப்புத் திட்டங்கள் ஆகிய திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றிடவும் கிராம நிர்வாக அலுவலர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
·  ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினருக்காக பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றுவதற்குத் தேவையான இருப்பிடச் சான்று, சாதிச்சான்று, வருமானச் சான்று போன்ற சான்றுகளுக்காக மனுச் செய்யும் மக்களுக்கு உடனடியாக மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தாமதமின்றி உரிய முறையில் சான்றுகள் வழங்க வருவாய் ஆய்வாளர் மூலமாக வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்வது கிராம நிர்வாக அலுவலரின் முக்கியக் கடமையும் பொறுப்பும் ஆகும். 
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக வழங்கப்படும் நலத்திட்டங்கள்:
·  வீட்டுமனை ஒப்படை
·  தொழிற்கூடங்கள் அமைத்தல்
·  கல்வி மற்றும் விடுதி வசதிகள்
·  கல்வி உதவித் தொகைகள் & இலவசப் புத்தகங்கல்
·  கலப்புத் திருமண உதவிகள்
·  தீண்டாமைக்கு எதிரான புகார்கள்
·  மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம்
·  துப்புரவு தொழில் புரிவோர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திட்டம்
·  வேலை வாய்ப்பிற்கான சிறப்புப் பயிற்சி
·  பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்
·  துப்புறவு தொழிலாளர் மறுவாழ்வுத் திட்டம்.
·  தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் / உதவிகள் 
பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினருக்காக வழங்கப்படும் நலத்திட்டங்கள்:
·  வீட்டுமனை ஒப்படை
·  தொழிற்கூடங்கள் அமைப்பதற்கு உதவிபுரிதல்
·  கல்வி மற்றும் மாணவ விடுதிகள்
·  கல்வி உதவித்தொகை & இலவசப் புத்தகங்கள்
·  இலவச தொழிற்கருவிகள் வழங்கும் திட்டம்
·  கள்ளர் சீரமைப்புத் திட்டம்
·  சுயதொழில் தொடங்க கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி அளித்தல்
·  மாநில சிறுபான்மை ஆணையத்தால் சிறுபான்மையினருக்கு உண்டான பிரச்சனைகளைத் தீர்த்தல்
·  தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையத்தால் பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாகச் சாதிகளை சேர்த்தல் / நீக்குதல் முறையீடுகள் மீது நடவடிக்கை எடுத்தல்.
·  சலவையாளர் – பித்தளை சலவைப் பெட்டிகள் வழங்குதல்
·  தையல் இயந்திரங்கள் வழங்குதல்
·  வேலை வாய்ப்புப் பயிற்சித் திட்டங்கள்
·  I.A.S. / I.P.S. பொதுப் பணிக்கான தனிப்பட்ட பயிற்சி மையம் மேற்கண்ட திட்டங்கள் மூலமாக பயனாளிகள் உரிய உதவிகளைப் பெற கிராம நிர்வாக அலுவலர் தாமதமின்றி செயல்பட வேண்டும்.