உயிரளபெடை

Nellai Pasanga 😍

#விவசாயம் என்பது தொழிலும் அல்ல கலாச்சாரமும் அல்ல. விவசாயம் என்பது வாழ்வியல் #save_jallikattu

nellaipasanga :-). Powered by Blogger.

உயிரளபெடை

உயிரளபெடை
உயிரளபெடை என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல். உயிரெழுத்துக்களில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துக்களுக்கு ஒலியளவைக் கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடைய எழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறு காட்டுவர்.
·          
அளபெடுகும் எழுத்துக்கள்
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு அளபெடுக்கும்.
எடுத்துக்காட்டு
அளபெடுத்த எழுத்து
அளபெடுத்துள்ள பாங்கு
குறிப்பு
பாஅல் புளிப்பினும் (பெயர்ச்சொல், புகாஅர் (வினைமுற்று) , புகாஅர்த் தெய்வம் (ஊர், ஆஅய் (அரசன்
ஆஅ
பால் - பாஅல்
செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர், படாஅஅ முலைமேல் துகில்
ஆஅஅ
கடா - கடாஅ, படா - படாஅஅ
செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை
பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போல
ஈஇ
குருவி - குரீஇ
சொல்லிசை அளபெடை
கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்
ஊஉ
உடுப்பதும் - உடுப்பதூஉம், உண்பதும் - உண்பதூஉம்
அளபெடுக்காவிட்டாலும் செய்யுளில் தளை தட்டாது ஆகையால் இன்னிசை அளபெடை
பேஎம் முதிர், மன்றத்து
ஏஎ
பேம் - பேஎம் [12]
இன்னிசை அளபெடை
இன்சொலால் ஈரம் அளைஇ 
ஐஇ
அளவி - அளைஇ
சொல்லிசை அளபெடை
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி
ஓஒ
கோல் - கோஒல்
செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை
-
ஔஉ
-
-
அளபெடுக்கும் இடங்கள்
மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.: எடுத்துக்காட்டு:
1
ஓஒதல் வேண்டும்
முதல்
2
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு
இடை
3
நல்ல படாஅ பறை
கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காணலாம்.
ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.
வகைகள்
இதில்
·         செய்யுளிசை அளபெடை,
·         இன்னிசை அளபெடை,
·         சொல்லிசை அளபெடை
என மூன்று வகைகள் உள்ளன.
அளபெடைப் பெயர்
·         ஆடூஉ
·         மகடூஉ

இந்தச் சொற்களைத் தொல்காப்பியம் பால் உணரும்படி வந்த சொற்கள் எனக் குறிப்பிடுகிறது.